Latest News :

தயாரிப்பாளரான நடிகை நீலிமா!
Sunday October-08 2017

‘தேவன் மகன்’ படத்தில் நாசரின் மகளாக குழந்தை வேடத்தில் நடித்து, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நீலிமா, தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘முரண்’, ‘திமிரு’,’ சந்தோஷ் சுப்ரமண்யம்’, ‘மொழி’ உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததோடு, ’வாணி ராணி’, ’தாமரை’,  ’தலையனை பூக்கள்’ உட்பட 80 க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

 

சினிமாவில் தனது 20 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நீலிமா, தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் தொடங்கியுள்ள இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம், ஜி தொலைக்காட்சிக்காக நெடுந்தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

 

‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற இந்த நெடுந்தொடரில் முரளி, நிஷ்மா, அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன், கெளதவி ரவி டேவிட் ராஜ், தாரிஷ், நேகா,அ ஸ்ரீநிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

விசு இசையமைக்கும் இந்த தொடருக்கு அர்ஜுனன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, மகேஷ் எடிட்டிங் செய்கிறார். இனியன் தினேஷ் இயக்குகிறார். இசைவாணன், நீலிமா இசை ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு தொடர்ந்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நெடுந்தொடர் மும்முனை காதல் கதையாகும்.

 

நாகர்கோவில் முட்டம், கன்னியாகுமர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட இந்த தொடர் குறித்து நீலிமா கூறுகையில், ”எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்.” என்றார்கள்.

Related News

908

”அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்” - ஆகாஷுக்கு நம்பிக்கை அளித்த சிவகார்த்திகேயன்
Saturday January-04 2025

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery