இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அப்படம் குறித்து சில சர்ச்சையான தகவல்களும் வெளியானது. ஆனால், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு படம் பற்றிய தகவல்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் மற்றும் அதைச் சார்ந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தம் 118 நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு தங்கலான் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. மேலும், அதற்காக படக்குழு வெளியிட்ட இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
சியான் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் தமிழ் திரையுலகத்தில் மட்டும் இன்றி இந்திய திரையுலகம் முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...