பிக் பாஸ் தமிழ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை இன்னும் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டு வருகிறது.
முதல் சீசனை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இரண்டாம் சீசனை நடிகர் விஜய் தொகுத்து வழங்குவார் என்றும் பிறகு சூர்யா ஒப்பண்டம் செய்யப்பட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் விஜய் மற்றும் சூர்யா என இருவரும் அல்ல புதிதாக ஒருவரிடம் விஜய் டிவி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அவர் தான் நடிகர் அரவிந்த்சாமி, ஏற்கனவே விஜய் டிவி-யின் குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ள அரவிந்த்சாமியிடம், பிக் பாஸ் இரண்டாம் சீசனை தொகுத்து வழங்குவது குறித்து விஜய் டிவி தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அரவிந்த்சாமி, தனது படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படாத வகையில், விஜய் டிவி-க்காக தேதி ஒதுக்கி கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம். விரைவில் இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...