Latest News :

’ராக்கி’ பட இயக்குநர் போல் ’அஸ்வின்ஸ்’ பட இயக்குநருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்! - நடிகர் வசந்த் ரவி நம்பிக்கை
Saturday July-08 2023

அறிமுக திரைப்படத்தின் மூலமாக கவனம் ஈர்க்கும் நடிகர்கள் திரையுலகில் நிலைத்து நிற்பதோடு, ரசிகர்களின் பேவரைட் நடிகர்களாகவும் உருவெடுப்பார்கள். அந்த வகையில், ‘தரமணி’ படம் மூலம் கவனம் ஈர்த்த வசந்த் ரவி, ‘ராக்கி’ படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்திருப்பதால், வசந்த் ரவி நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், அஸ்வின்ஸ் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வசந்த் ரவி, “வளர்ந்து வரக்கூடிய நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது. இதற்கு காரணமாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாபி சார் தமிழில் இனி பெரிய படங்கள் தயாரிப்பார். அதற்கு ‘அஸ்வின்ஸ்’ முதல் படமாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. தருண் ஒரு எனர்ஜியான இயக்குநர். ‘ராக்கி’ அருண் எப்படி இப்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ இயக்குகிறாரோ அதுபோல தருணுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்திற்கு தியேட்டர் விசிட் போனபோது, பார்வையாளர்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவு எமோஷனலாக இருந்தது. இதுபோல, ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை. இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் இரண்டாவது பாகம் குறித்தான அறிவிப்பு சீக்கிரம் வரலாம்.” என்றார்.

 

இயக்குநர் தருண் தேஜா பேசுகையில், “நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையை நான் எழுதும்போதே பார்வையாளர்களுக்கு நல்லதொரு ஹாரர் சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். அது சரியாக போய் சேர்ந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இரண்டு, மூன்று முறை பார்வையாளர்கள் திரும்ப வந்து பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன். என்னுடைய குறும்படம் பார்த்து பாராட்டி வாய்ப்பு கொடுத்த பிரவீன் சாருக்கும் பாபி சாருக்கும் பிரசாத் சாருக்கும் நன்றி. படமாக உருவான பின்பு சக்தி சார் அவ்வளவு ஆதரவு கொடுத்தார். மிகச்சிறந்த உழைப்பைக் கொடுத்த என்னுடைய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் நன்றி.  நடிகர்கள் யாரையும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை என நினைக்கிறேன். வொர்க்‌ஷாப்பில் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய குறும்படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் கூட்டிச் சென்றதே விமலாராமன் மேம்தான். அவர் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். நடிகர் என்பதையும் தாண்டி அஸ்வின் எனக்கு நல்ல சகோதரர். கிளைமாக்ஸில் வசந்த் ரவியின் கடின உழைப்பு பாராட்டுதலுக்குரியது.” என்றார்.

 

நடிகை விமலா ராமன் பேசுகையில், ”‘அஸ்வின்ஸ்’ படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரக்கூடிய சக்தி சாருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பிரசாத் சார், பாபி சார், பிரவீன் சாருக்கு நன்றி. படத்தின் விமர்சனம் நான் பார்த்த வரையில் படத்தொகுப்பு, சவுண்ட் மிக்ஸிங், மியூசிக் என அனைத்து டிபார்ட்மெண்ட்டையும் பாராட்டி இருந்தார்கள். என்னுடைய சக நடிகர்கள் எல்லாருமே அற்புதமாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். என்னுடைய இயக்குநர் தருணுக்கும் ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

Asvins Success Meet

 

தயாரிப்பாளர் BVSN பிரசாத் பேசுகையில், “இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் பேசுகையில், “எல்லாப் படங்களும் வெற்றிப் பெறும்போது திருப்தி கிடைக்கும். ஆனால், ‘அஸ்வின்ஸ்’ வெற்றிப் பெற்றிருக்கும்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நான் எதிர்பார்த்த வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அதிருப்தி கிடைத்திருக்கும். ஆனால், அதை எல்லாம் தகர்த்து இப்படி ஒரு வெற்றி விழாவில் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வசந்த் ரவி நடித்திருந்த ‘ராக்கி’ திரைப்படம் தனுஷ் சாரின் ‘புதுப்பேட்ட’ போன்று கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம். ’அஸ்வின்ஸ்’ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் போய் பார்த்த ஒரு படம். வசந்த்ரவி, விமலாராமன், சரஸ்வதி என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த சினிமா அனுபவத்தை இது கொடுத்திருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக வெளியிட்டேன். வசந்த்ரவி சார், இயக்குநர் என படக்குழுவின் அனைவருக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றி நியாயமானது.” என்றார்.

Related News

9095

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery