இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்களை வெளியிட்டு படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த நிலையில், நேற்று வெளியான படத்தின் ப்ரிவியூ வீடியோ ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.
பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர்ப்பதுடன் ஜவான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது.
”நான் யார்?” என்று ஷாருக்கானின் குரலில் தொடங்கும் ப்ரிவ்யூவில் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருப்பதோடு, பிரமாண்டமான வியக்க வைக்கும் பல சாகச காட்சிகளும் நிறைந்திருக்கிறது. மேலும், ஷாருக்கான் “நான் வில்லனா? ஹீரோவா? என்று கேட்பதோடு, “நான் வில்லனாக நின்னா என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது? என்று சொல்லும் பஞ்ச் வசனம் நிச்சயம் திரையரங்கையே அதிர வைக்கும் என்று உறுதி.
இப்படி பஞ்ச் வசனங்களோடு ப்ரிவியு இறுதியில், “பாட்டு பாடவா...பாடம் சொல்லவா...” என்ற பாடலை பாடி நடனம் ஆடிக்கொண்டே ஷாருக் அதிரடிக்கு தயராகும் காட்சியும், அவருடைய மொட்டை தலையும் மிரட்டலாக இருக்கிறது. ப்ரிவியூவின் ஒவ்வொரு பிரேமும் அதிரடி நிறைந்த அமர்க்களமாக இருப்பது, ரசிகர்களை உச்சாகமடைய செய்திருக்கிறது.
திரைத்துறையில் தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற அட்லீயின் இயக்கத்தில், சமீப காலங்களில் வெற்றிகரமான இசை ஆல்பங்களை வழங்கிய அனிருத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும் பாடல்களும் உற்சாகத்தை கூட்டுகின்றன. மேலும் ஜவான் திரைப்படத்தில், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, மிகவும் பிரபலமான இசை கலைஞரான ராஜா குமாரியின் 'தி கிங் கான் ராப், ஒரு உயர் ஆற்றல் மற்றும் வசீகரிக்கும் பாடல், இந்த ப்ரிவ்யூவில் இடம்பெற்றுள்ளது.
ஜவான் இந்திய ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படுகிற திரைப்படமாகும் , மேலும் இதுவரை அல்லாத அளவிற்கு மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்திய திரைப்படம் ஆகும், இந்தப் படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர், ஷாருக்கான் முதல் தீபிகா படுகோன் , நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், மேலும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இத்தனை நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களிடமும் இந்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது கண்டிப்பாக ஒரு பான் இந்திய வெற்றி படமாக இருக்கும்.
ஜவான் படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என்பதை இந்த ப்ரிவ்யூ உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் போஸ்டர்கள் மற்றும் ஒரு சிறிய டீசர் மூலம் பார்வையாளர்களை எதிர்பார்ப்பை எகிறச்செய்த பிறகு, தற்போது ப்ரிவ்யூ வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கெளரி கான் மற்றும் கவுரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஜவான்’ வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...