Latest News :

’பிச்சைக்காரன் 2’ போல் ‘கொலை’ படமும் பிளாக்பஸ்டர் வெற்றியடையும்! - பிரபலங்கள் நம்பிக்கை
Tuesday July-11 2023

தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்கள் பட்டியலில் விஜய் ஆண்டனி முக்கிய நபராக நீடித்து வருகிறார். அவருடைய ‘பிச்சைக்காரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது போல், சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படமும் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பற்றி முன்பே கணித்த விஜய் ஆண்டனி விளம்பரங்களில் பிளாக்பஸ்டர் என்று அச்சிட்டு வெளியிட்டு சொன்னது போலவே படத்தை மிகப்பெரிய வெற்றியடைய செய்தார்.

 

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கொலை’. ‘விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி வித்தியாசமான லுக்கில் துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகிகளாக மீனாட்சி செளத்ரி மற்றும் ரித்திகா சிங் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், ஆனந்த், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ’கொலை’ திரைப்படம் வரும் ஜூலை 21 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள் அனைவரும், ‘பிச்சைக்காரன் 2’ எப்படி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு அது போல் ‘கொலை’ திரைப்படமும் விஜய் ஆண்டனிக்கு மற்றொரு பிளாக்பஸ்டர் படமாக அமையும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “’கொலை’ படம் போலவே நல்ல கண்டெட்டுடன் நிகழ்ச்சி நடந்து வருகிறது. எடிட்டர், படத்தொகுப்பு, இசை என அனைத்து தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இயக்குநர் பாலாஜி நிறைய ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் அவர். இந்தப் படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி தமிழ் தெரியாமல் கூட பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்துள்ளார்.  மிஷ்கின் சாருடைய பேச்சு கொலை செய்ய வேண்டும் என்று தோன்றுமளவுக்கு சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியை போலவே படமும் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.

 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “’கொலை' திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட முடிவு செய்தோம். இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். 'கொலை'க்கு பிறகு 'இரத்தம்' வரும். அதன் பிறகு 'மழை பிடிக்காத மனிதன்' படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவது எங்களுக்கு மகிழ்ச்சி. இயக்குநர் பாலாஜி குமார் மிகச்சிறந்த படமாக இதை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெற்றது போல இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி என நாயகிகள் இரண்டு பேருக்கும், படத்தின் தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. 'பிச்சைக்காரன் 2' வெளியானதும் என்னுடைய படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும், சிறிது காத்திருங்கள் என்று விஜய் ஆண்டனி நம்பிக்கையாக சொன்னார். அவர் சொன்னது போலவே தற்பொழுது 'கொலை' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. க்ரைம் திரில்லர் உடன் சேர்ந்து படத்தில் நிறைய எமோஷனலான விஷயங்களும் உள்ளது.  படத்தின் நேரம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் தான். ஜூலை 21ஆம் தேதி படம் வெளியாகிறது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்.” என்றார்.

 

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசுகையில், “’கொலை’ படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். ‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்மமுடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.” என்றார்.

 

இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது, ”இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது.  பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் லிங்குசாமி, “விஜய் ஆண்டனியுடன் எனக்கு நேரடியாக பழக்கமில்லை. ஆனால், விஜய் மில்டனும், சசியும் அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளனர். இசையமைப்பாளராக ஆரம்பித்து இப்போது இயக்குநராக நம்பிக்கையோடு வளர்ந்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு படம் நிச்சயம் வெற்றிப் பெறும்.” என்றார்.

 

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி பேசியதாவது, “’போர்தொழில்’ படத்திற்கு பிறகு இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என பலரும் நம்பிக்கைக் கொடுத்தனர். இந்தப் படத்திற்காக கடின உழைப்பை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரபிரதேசத்தில் பிசினஸ் பாருங்கள் என்று என்மீது நம்பிக்கையாகக் கொடுத்தர் விஜய் ஆண்டனி. அவருக்கு நன்றி.” என்றார்.


Related News

9100

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery