Latest News :

இந்திய டிஜிட்டல் துறையில் புதிய சாதனைப் படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’
Wednesday July-12 2023

ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் பிரிவியூ சமீபத்தில் வெளியாகி இந்திய டிஜிட்டல் துறையில் புதிய சாதனைப் படைத்துள்ளது.

 

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக முறியடித்திருக்கிறது. அனைத்து தளங்களிலும் 112 மில்லியன் பார்வைகளை பெற்ற வீடியோவாக அபிரிமிதமான சாதனைகளைப் படைத்து, தற்போதுள்ள வரையறைகளை உடைத்து, இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

முதல் 24 மணி நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாக ஜவானின் பிரிவியூ முதலிடத்தில் உள்ளது. இது ஷாருக்கானின் பரவலான புகழ்... படத்தை படத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் படத்தின் வெளியிட்டை பற்றி அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு, ஆகியவற்றின் சான்றாகும். 

 

ஜவானுக்கு கிடைத்த சாதனை பார்வைகள் பெருகிவரும் நிலையில், போட்டிகள் நிறைந்த பொழுதுபோக்கு துறையில் கதை சொல்லல் மற்றும் பலனுள்ள சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் ஆற்றலை குறிக்கிறது.‌

 

இந்த வீடியோ அனைத்து எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்திய டிஜிட்டல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு கிடைத்த அமோகமான வரவேற்பு திரையரங்குகளில் ஜவான் வெளியாவதற்கு முன்பே படம் குவித்துள்ள மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பிரதிபலிக்கிறது.

 

விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகிய தென்னிந்திய பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரித்திருக்கிறார். கெளரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

 

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஜவான்’ வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9103

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery