அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு மற்றும் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கிடா’. (Goat) இதில், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, கமலி, லோகி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம்சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீசன் இசையமைக்க, ஏகாதசி பாடல்கள் எழுதியுள்ளார். ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்ய, கே.பி.நந்து கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் இப்படத்திற்கு பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் ஆக்ஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கு 20 ஆம் தேதி வரை நடைபெறும் 14 வது ’இந்தியன் பிலிம் ஃபெஷ்டிவல் ஆஃப் மெல்போர் என்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கிடா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில், இப்படத்திற்கு உட்சபட்ச பாராட்டுக்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ரசிகர்களை கவந்துள்ள ‘கிடா’ திரைப்படம் தமிழக ரசிகர்களைக் கவரும் வகையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...