Latest News :

யுவன் - சிலம்பரசன் இணையும் இசை நிகழ்ச்சி! - கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் நடத்துகிறார்கள்
Thursday July-13 2023

இசையால் இளைஞர்களை கட்டிப்போடும் வல்லமை படைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திரைப்படங்கள் மூலமாக மட்டும் இன்றி இசை நிகழ்ச்சி மூலமாகவும் உலக மக்களை கவர்ந்து வருகிறார். இதனால் யுவனின் இசை நிகழ்ச்சி என்றாலே மிகப்பெரிய வரவேற்பு வருகிறது.

 

இந்த நிலையில், ’ஹை ஆன் யுவன்’ (High on U1) என்ற தலைப்பில் வரும் ஜூலை 15 ஆம் தேதி மலேசியாவில் யுவனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் யுவனுடன், நடிகர் சிலம்பரனும் பங்கேற்று பாடல்கள் பாடப்போவது நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

 

இந்த இசை நிகழ்ச்சியில் விருந்தினராக மட்டும் இன்றி, சில பாடல்களை பாடி ரசிகர்களை சிலம்பரசன் மகிழ்விக்க இருக்கிறார். இதன் மூலம் சுமார் 12 வருடங்களுக்கு பிறகு சிலம்பரசன், மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

High On Yuvan

 

யுவன் - சிலம்பரசன் கூட்டணியில் நடைபெற இருக்கும் இந்த இசை நிகழ்ச்சி தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இசையால் காதுகளுக்கு விருந்தளிப்பது போல், கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி மற்றும் கவிதா சுகுமார் செய்து வருகிறார்கள்.

 

மேலும், மலேசியாவை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் யுவன் சங்கர் ராஜாவை வைத்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக கார்த்திக் இளம்வழுதி மற்றும் கவிதா சுகுமார் தெரிவித்துள்ளார்கள்.

Related News

9109

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...