Latest News :

’பாய் - ஸ்லீப்பர் செல்’ படத்தின் புரோமோ வீடியோவால் புதிய பரபரப்பு!
Thursday July-13 2023

கே.ஆர்.எஸ் பிலிம்டாம் தயாரிப்பில், கமலநாதன் புவன் குமார் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ‘பாய் - ஸ்லீப்பர் செல்’. பி.வி.ஆர் பிக்சர்ஸ் வெளியிட இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இப்படத்தின் மற்றொரு புரோமோ வீடியோ வெளியாகி மேலும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

 

‘பார் - ஸ்லீப்பர் செல்’ படத்தின் வீடியோ கிளிம்ப்ஸை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்கான தேதியை அறிவிப்பதற்காக புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

புரோமோ வீடியோவில், ஒரு இஸ்லாமிய பெண் தொழுதுக்கொண்டிருக்க, அவருடைய பின்பக்கம் மூன்று நபர்கள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கைப்பேசி ஒன்றுக்கு ‘பாய்’ என்பவரிடம் இருந்து அழைப்பு வர, அந்த இடத்தில் ‘கிளிம்ப்ஸ் 15-07-23 (7 மணி) - க்கு வெளியாகும் என்று அந்த கைபேசிக்கு குறுந்தகவல் வருவது போல் அந்த வீடியோ முடிவடைகிறது.

 

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும், ‘தி கேரளா ஸ்டோரி’, ‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘பர்ஹானா’ போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிட்டு பெரும் சர்ச்சை உருவான நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் புரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் புயலும், பூகம்பமும் ஒருசேர வந்தது போன்ற பரபரப்பையும், சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

 

சில நொடிகள் ஓடும் இந்த வீடியோவிலேயே இவ்வளவு பெரிய சர்ச்சைகளை கிளப்பும் ‘பாய் - ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் அடுத்தடுத்த அறிவிப்புகளால் அணுகுண்டு போட்டது போல கோடம்பாக்கத்தை அதிர வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

 

Related News

9110

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...