Latest News :

’லவ்’ திரைப்படம் எனக்கு முழு திருப்தி கொடுத்திருக்கிறது - நடிகை வாணி போஜன் நெகிழ்ச்சி
Friday July-14 2023

’லூசிஃபர்’, ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, ‘குரூப்’ போன்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படங்களின் தமிழ் பதிப்பிற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதியிருக்கும் ஆர்.பி.பாலா ‘லவ்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குவதோடு ஆர்.பி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயார்க்கவும் செய்திருக்கிறார்.

 

பரத், வாணி போஜன் நடித்திருக்கும் இப்படம் பரத்தின் 50 வது படமாகும். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைத்திருக்கிறார். பி.ஏ.ராஜா பாடல்கள் எழுதியுள்ளார்.

 

இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொள்ள மூத்த பத்திரிகையாளர்கள் தலைமையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

 

நிகழ்ச்சியில் நடிகை வாணி போஜன் பேசுகையில், “நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்கள் மட்டும் மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் பரத் பேசுகையில், “என் படங்களின் எண்ணிக்கையை நான் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. நம் வேலையை சரியாக செய்தால் போதும் என்று நினைப்பவன். இயக்குநர் தான் இந்த படம் என்னுடைய ஐம்பாதவது படம் என்று சொன்னார், அவர் சொன்ன பிறகு தான் 50 வது படமாச்சே, சரியான படம் கொடுக்க வேண்டுமே என்று தோன்றியது. ஆனால், இப்போது ‘லவ்’ திரைப்படம் என்னுடைய ஐம்பதாவது படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ எம் ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது, மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குநர் தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா சாருக்கு நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.பி.பாலா பேசுகையில், “படம் ஜூலை 28 ஆம் தேதி வருகிறது. இப்போது படத்தை எடுப்பதை விட படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது. இப்படத்தின் டீம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். பரத் படம் முழுவதும் பெரும் உறுதுணையாக இருந்தார். முத்தையா சார் இன்று வரை இப்படத்திற்கு வேலை செய்கிறார். அவர் படம் போல் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்த போது, இந்தப்படம் பற்றிச் சொன்னேன். எனக்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். டேனியல் மிகச் சிறந்த நண்பர். பரத் என்னை நம்பி 50வது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

பாடலாசிரியர் பி.ஏ.ராஜா பேசுகையில், “முதலில் பிஜி முத்தையா சார் தான் இந்த படத்திற்காக என்னை கூப்பிட்டார். இயக்குநர் யாரெனக் கேட்டபோது RP பாலா என்றார். அவரே பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் என்னை ஏன் கூப்பிடுகிறார் என்று தோன்றியது. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். ஆனால் அவர் நான் பிஸியாக இருக்கிறேன், நீங்கள் எழுதுங்கள் என்றார். வைரல் வரிகள் இல்லாமல் முழுக்க தமிழில் பாட்டுக் கேட்ட முதல் இயக்குநர் இவர் தான். அதுவே மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் பாடல் அற்புதமாக வந்துள்ளது, பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Bharath

 

இசையமைப்பாளர்  ரோனி ரஃபேல் பேசுகையில், “தமிழில் இது எனது முதல் படம். கேரளாவில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். மலையாளப் படம் மூலம் தான் பரத் சார் அறிமுகம், பாலாவும் அறிமுகம். தமிழில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பரத் சாரின் 50வது படத்தில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர் RP பாலாவுக்கு நன்றி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. படமும் நன்றாக வந்துள்ளது, படம் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.” என்றார்.

 

எடிட்டர் அஜய் மனோஜ் பேசுகையில், “படம் பார்த்தேன், நன்றாக உள்ளது. பரத் மற்றும் கதாநாயகியின் கடைசி 20 நிமிட காட்சிகள் அருமையாக வந்துள்ளது. பரத் சாரின் 50வது படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பளித்த இயக்குநர் RP பாலா சாருக்கு நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா பேசுகையில், “ஒரு டீமோட பெரிய சக்ஸஸ் என்பது அந்த டீம் வெற்றி பெற்று மீண்டும் அதே டீம் சேர்ந்து வேலை பார்ப்பது தான். அது போல் "லவ்" படம் வெற்றி பெற்று இதே டீம் மீண்டும் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை சுயம் சித்தா பேசுகையில், “எனக்குத் தமிழ் கொஞ்சமாகத்தான் தெரியும். கோவிடுக்கு பிறகு வந்த முதல் படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான படம், பட வாய்ப்பு தந்த RP பாலா சாருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

டேனியல்  பேசுகையில், “இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை, போன் செய்து,  என்ன லுக்?  ஃப்ரியா?  என கேட்டுவிட்டு, ஷூட்டிங் கூப்பிட்டு விடுகிறார்கள். டெய்லி பேட்டா போல் வேலை வருகிறது. இப்போதைய சினிமா அந்த மாதிரி மாறிவிட்டது.  லவ் படம் நன்றாக வந்துள்ளது இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் ‘லவ்’ திரைப்படம் வெளியாகிறது.

Related News

9112

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery