பிக் பாஸ் புகழ் முகேன் ‘வேலன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமான அப்படத்தை கவின் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்த முறை க்ரைம் த்ரில்லர் ஜானரை கையில் எடுத்திருக்கும் இந்த வெற்றி கூட்டணியின் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
ஜி.மணிக்கண்ணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதோடு, ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
’பார்க்கிங்’ பட ஒளிப்பதிவாளர் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘டாடா’ பட இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...