Latest News :

கீர்த்தி சுரேஷின் அதிரடி நடிப்பில் உருவாகும் ‘கண்ணிவெடி’!
Saturday July-15 2023

தரமான மற்றும் வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், கதாயாகிகளை மையப்படுத்திய திரைப்படங்களையும் தொடர்ந்து தயாரித்து வருகிறது. அந்த வகையில், மற்றொரு புதுமையான கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகும் ‘கண்ணிவெடி’ என்ற படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

 

அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கும் அதிரடி திரில்லர் படமான ’கண்ணிவெடி’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 

பெண்களை மையமாக கொண்ட கதையம்சத்தில் உருவாகும் ‘கண்ணிவெடி’ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெருகிய தற்போதைய சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படமாக உருவாக உள்ளது.

 

வித்தியாசமான கதைக்களத்தில், ரசிகர்களை விறுவிறுப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் அதிரடியாக நடிக்கிறார். மேலும், ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் தனது அசாத்திய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் அவரது வேடம் இப்படத்தில் அமைந்திருக்கிறது.

 

படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “’கண்ணிவெடி’ திரைப்படம் பரபரப்பான கதை சொல்லல் மற்றும் வலிமையான தொழில்நுட்ப பணிகள் மூலம் ரசிகர்களை கவரக்கூடிய தரமான படமாகவும், திரைப்பட ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

 

Kannivedi

 

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராக பணியாற்ற பிசி ஸ்டண்ட்ஸ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

இப்படத்தின் பூஜை நேற்று (ஜூலை 14)  சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கணேஷ் ராஜ் மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

Related News

9114

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery