Latest News :

”நடுத்தர மக்களுக்கும் அரசியல் தேவை” - இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து பேச்சு
Sunday July-16 2023

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில அளவிலான பொதுக்கூட்டம் மற்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று (ஜூலை 15) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 

கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி-யுமான  டாக்டர்.பாரிவேந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கூட்டணி கட்சிகளின் முனோடிகளும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஜே.கே கட்சி தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

 

அதிமுக சட்டப் பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜி.ராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், துணைத் தலைவர் ஆனந்த முருகன், துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜி.ஜீவா, மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், முன்னாள் தலைவர் கோவை தம்பி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேசுகையில், “தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் 'ஐஜேகே'வின் ஒரு சிறிய முன்னோட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 24 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதே வளாகத்தில் தான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரவி பச்சமுத்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 'மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை' என்பது போல் என் மகனால் எனக்கு எப்போதுமே பெருமை வந்து சேரும்.” என்றார்.

 

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து பேசுகையில், “இளைஞர்களுக்காக பல சேவைகளையும் தொண்டுகளையும் பாரிவேந்தர் கல்வியாளராக செய்துள்ளார். அவருக்கு என்றுமே பணத்தின் மீது ஆசை இருந்ததே இல்லை. எந்தவொரு தொழில் தொடங்கும் போதும் அவர் பணம் குறித்து கவலைப்பட்டதும் இல்லை. சுயநலம் இல்லாத அவரிடம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அன்பு செலுத்தி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே, ஒரு கோட்பாட்டைஉருவாக்கி, ஓர் அடையாளமாக இருக்க வேண்டும் என்று தான். நடுத்தர மக்களுக்கும் அரசியல் தேவை. அரசியல் என்றால் அடுத்த வரை திட்ட வேண்டும் என்பது கிடையாது. இது எங்கள் கட்சியின் கொள்கையாகும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த பிரம்மாண்ட பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கான விளம்பரங்களை முன்னெடுத்து சிறப்பாக ஒருங்கிணைத்த விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

IJK Party Meeting

 

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பேசுகையில், “மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் கூட்டணி வருமா, வராதா என்கிற நிலையை மாற்ற தான் இந்த கூட்டம். பாஜக, அதிமுகவை ஒருசேர அழைத்து வந்து எதிர்க்கட்சிக்கு தற்போது செய்தியாக அறிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அசைக்க முடியாத கூட்டணி வரும். பாரிவேந்தர் அதனை தற்போது முன்னெடுத்துள்ளார்.” என்றார். 

Related News

9115

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery