Latest News :

விஷாலுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்!
Monday July-17 2023

‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்த் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மூன்றாவது முறையாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இன்வீனியோ ஆரிஜன் சார்பில் அலங்கார் பாண்டியன், கல்யாண் சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பை மேற்கொள்கின்றனர்.

 

விஷாலின் 34 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் துவங்கிய நிலையில், தற்போது இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இயக்குநர் ஹரியின் ‘யானை’ படத்தில் அவர் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களை இயக்கினாலும் குடும்ப கதைக்களத்தின் பின்னணி சொல்லி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் ஹரி, இப்படத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில், அனைவரும் தாங்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த, கடந்து வந்த சம்பவங்களை நினைவு கொள்ளும் வகையில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். 

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பையனூரில் உள்ள பெப்ஸிக்கு சொந்தமான அரங்கில்,  ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனின் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் துவங்கியது. மேலும்  சென்னையை அடுத்து, தமிழ்நாட்டின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி, வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

 

இப்படம் குறித்து கூறிய நடிகர் விஷால், “என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும்.  இசையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, புஷ்பா படம் மூலம் 5 மொழிகளிலும் ஹிட் தந்த இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்,   ’ஆறு’,’வேங்கை’, ‘சாமி’, ‘சிங்கம்1,2’ ஆகிய தொடர் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஹரியுடன் மீண்டும் இணைகிறார்.” என்றார்.

 

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ்  கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், “தமிழ் திரையுலகில் தொடர்ந்து தனித்துவமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும்  படங்களைத் தயாரித்து வரும் எங்கள் நிறுவனம் மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியில், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் அலங்கார் பாண்டியனுடன்  இணைந்து இப்படத்தைத் தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.” என்றார்.

 

எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். காளி பிரேம்குமார் கலை இயக்குநராக பணியாற்ற, டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

 

படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்களை படக்குழுவி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Related News

9119

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery