"ஜப்பான்ல ஜாக்கி ஷான் கூப்பிட்டாக, அமெரிவுல டிரம்ப் கூப்பிட்டாக", என்ற ரீதியில் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றவர்கள், தனக்கு இத்தன வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அத்தனை படங்கள் புக் ஆகியிருக்கிறது, என்று கூறி வந்தாலும், தற்போது மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் மட்டுமே அத்தனை பேரும் பிஸியாக உள்ளார்களே தவிர, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.
ஆனால், பிக் பாஸ் நாயகி ஓவியா, இதற்கு எதிர் மறை. மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்காத ஓவியா, வாய்ப்புகள் வருகையால் ரொம்பவே பிஸியாகியுள்ளார். ஒரு பக்கம் சில கோடி சம்பளத்துடன் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், மறு பக்கம் கேட்ட தொகையை சம்பளமாக கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியிருக்கிறார்.
இதற்கிடையில், அவ்வபோது சமூக வலைதளங்கள் மூலமாக தனது ரசீகர்களையும் சந்தித்து வரும் ஓவியா, சமீபத்திய சந்திப்பின் போது தனது ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜூலியை, அக்கல்லூரியில் உள்ள ஓவியா ரசிகர்கள், பேச விடாமல் அவமானப்படுத்தி அனுப்பினார்கள். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தனது ரசிகர்களிடம் பேசியுள்ள ஓவியா, ”இனி ஜுலியை யாரும் தவறாக நடத்தாதீர்கள், அவர் பாவம்” என்று கூறியுள்ளார்.
ஓவியாவின் இத்தகைய நடவடிக்கையால், அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...