’பதான்’ வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான் அட்லீ, இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஷாருக்கானுடன், தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கெளரி கான், கெளரவ் வர்மா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
’ஜவான்’ படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பிரமாண்டமான சாகசக் காட்சிகள் நிறைந்த டீசர் உலக அளவில் டிரெண்டாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜவான்’ வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் மற்ற முன்னணி நட்சத்திரங்களை கொண்ட போஸ்டர்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி, நயன்தாராவின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் நயன்தாரா மீண்டும் அதிரடி ஆக்ஷனில் கலக்கப் போகிறார் என்பதை சொல்லும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...