யோகி பாபு, வாணி போஜன் நடிப்பில், இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இணையத் தொடர் ‘சட்னி சாம்பார்’. இந்தியாவின் முன்னணி ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தின் சிறப்பு தொடராக உருவாகும் இத்தொடர் கடந்த ஜூலை 15 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
யோகி பாபு, வாணி போஜன் ஆகியோருடன்'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர் சுந்தர்ராஜன் இந்தத் சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
இத்தொடர் குறித்து கூறிய இயக்குநர் ராதா மோகன், “’சட்னி - சாம்பார்’ சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.” என்றார்.
நடிகர் யோகி பாபு கூறுகையில், “சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக ’சட்னி சாம்பார்’ இருக்கும்.” என்றார்.
நடிகை வாணி போஜன் கூறுகையில், “டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்.” என்றார்.
பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்தொடருக்கு அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனம் எழுத, ஜிஜேந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். கே.கதிர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...