முன்னணி காமெடி நடிகராக தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த சந்தானம், ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு சில வெற்றிப் படங்களை கொடுத்தாலும், தனது பாணியை மற்றியதால் எதிர்பார்த்த வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக அவருடைய சில படங்களில் அவர் தனது பாணியை முழுவதுமாக மாற்றி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், அதை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், சந்தானம் முழுக்க முழுக்க காமெடியாக நடிப்பதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர் ஹீரோவாக நடித்தாலும் ‘தில்லுக்கு துட்டு’, ’A1' போன்ற படங்களைப் போல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணத்தை புரிந்துக்கொண்ட சந்தானம், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் மூலம் அதை நிறைவேற்றவும் செய்துள்ளார். ஆம்ல், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் மூலம் பழைய சந்தானம் ரிட்டர்ன் ஆகி விட்டார்.
பேய் படமாக இருந்தாலும் சந்தானத்தின் ஹைலைட் காமெடிகள் நிறைந்த இப்படம் இதுவரை பார்த்திராத பேய் படமாக மட்டும் இன்றி பேய் படங்களிலேயே ஃபிரஷ்ஷான பேய் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் நம்பிகை தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரமேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரெம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார்.. இவர்களுடன் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ்காந்த், பிரதீப் ராவத், ரெடிங் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மான்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வரும் ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக 'டிடி ரிட்டர்ன்சை' முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். 'தில்லுக்கு துட்டு' முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசுகையில், “இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும் ராம்பாலா அவர்களும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.” என்றார்.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசுகையில், “இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். இப்படத்தின் டீம் மிகவும் அருமையான டீம். இன்றைய காலகட்டத்தில் அழ வைப்பதும் உணர்ச்சிவசப்பட வைப்பதும் மிகவும் சுலபம், ஆனால் மனம் விட்டு சிரிக்க வைப்பது கடினம். ஆனால் இந்த கலையில் சந்தானம் சிறந்து விளங்குகிறார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை நான் பார்க்கும் போது பல இடங்களில் அடக்க முடியாமல் சிரித்தேன். ரசிகர்களும் அதே போல சிரித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றர்.
ஒளிப்பதிவாளர் தீபக் பேசுகையில், “சந்தானம் அவர்களுடன் இது எனக்கு நான்காவது படம். அவருடன் பணிபுரிவது குதூகலமான அனுபவம். நகைச்சுவை என்பது எளிதான விஷயம் அல்ல, ஆனால் இப்படக்குழு அதை சாதித்து இருக்கிறது. பேயுடன் கேம் விளையாடுவது தான் படத்தின் மையக்கரு, படத்தை பார்ப்பவர்களும் தாங்களும் இதை விளையாடுவது போல் உணர்வார்கள். மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையை இயக்குநர் பிரேம் ஆனந்த் வடிவமைத்துள்ளார்.” என்றார்.
இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், “சுயாதீன இசைக்கலைஞரான நான் தற்போது திரைப்பட இசையமைப்பாளராக மாறி உள்ளேன். ஆல்பங்களுக்கு இசையமைப்பது சற்றே எளிது, ஏனென்றால் விதிகள் எதையும் பெரிதாக பின்பற்ற தேவையில்லை. ஆனால் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது சூழலுக்கு ஏற்ப இசையமைக்க வேண்டும், அது கொஞ்சம் சவாலான விஷயம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த், தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சேது ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.” என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், “தான் மட்டும் இல்லாமல் தன் குழுவினரும் வளர வேண்டும் என்று சந்தானம் அவர்கள் நினைப்பார். நானும் அக்குழுவை சேர்ந்தவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நகைச்சுவை நிறைந்த திரைப்படம் இது, டிடி ரிட்டர்ன்ஸ் போன்று இன்னும் பல திரைப்படங்களில் சந்தானம் நடிக்க வேண்டும்.” என்றார்.
நடிகை சுரபி பேசுகையில், “இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனென்றால் பேய் காமெடி படத்தில் இப்போது தான் முதல் முறையாக நடித்துள்ளேன். இப்படத்தின் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சந்தானம் அவர்களுக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கும் மிக்க நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார் மோகன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...