Latest News :

ரஜினி போல் உங்களையும் தமிழக மக்கள் வாழ வைப்பார்கள்! - ‘லாக் டவுன் டைரி’ ஹீரோவை வாழ்த்திய பிரபலங்கள்
Saturday July-22 2023

பல்வேறு மொழிகளில் சுமார் 900 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன், ‘லாக் டவுன் டைரி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக, இவரது மகன் ஜாலி விஹான் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்ர். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

அங்கிதா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாசி கிஃப்ட் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், பெப்சி விஜயன, தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்காளை, எம்.எஸ்.பகர், நடிகை பிரைவினா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகரன, எஸ்.முரளி உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஜாலி பாஸ்டியன், ““900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம் இயக்கி இருக்கிறேன். 2வது படமாக லாக் டவுன் டைரி என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன்.  கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில்  மக்கள் எவ்வளவு  சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.  வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் ஆராய்ச்சி செய்து தொகுத்திருப்பதுடன் இளம் காதல்  ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை  மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம் உருவாகியிருக்கிறது. இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல குடும்பங்களின் கதையும் உள்ளடக்கியது. குடும்பத்துடன் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். உங்கள் எல்லோருக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். இப்படத்தில் இடம் பெறும் லாக் டவுன் பற்றிய பாடலை நான் எழுதி இருப்பதுடன் திரைக்கதை, ஸ்டண்ட் அமைத்து இயக்கி உள்ளேன். வசனத்தை பிரபாகர், எஸ்.பி.ராஜ்குமார் எழுதி உள்ளனர். டைமண்ட் பாபு  புரமோஷன் உள்ளிட்ட பணிகளுக்கு எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.  இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “லாக் டவுன் டைரி பட டிரைலர்,  பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது. படமும் குடும்பபாங்காக இருக்கும் என்று தெரிகிறது. இங்கும் பேசிய ஹீரோ ஆங்கிலத்தில் பேசினார்.  இனி அவர்  தமிழில் பேச வேண்டும். அவரது நடிப்பு  டிரைலரில் சிறப்பாக இருந்தது.

 

தயாரிப்பாளர்களுக்கு  நன்மை தரக்கூடிய விஷயங்கள் சங்கம் மூலமாக நடக்க உள்ளது. இன்று திரையுலகினர் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தமிழக முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து தமிழ் திரையுலகுக்கு வேண்டிய நன்மைகள் செய்ய கேட்டுக் கொண்டோம். மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை திரையுலகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடத்த அனுமதி கேட்டோம் அதற்கும் அனுமதி தந்திருக்கிறார்.

 

நடிகர்கள்,  தயாரிப்பாளரிடம் போடும் ஒப்பந்த்தை மதிக்க வேண்டும். 80 சதவீதம் பேர் மதிக்கிறார்கள், 20 சதவீதம்.பேர் மதிப்பதில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி நடிகர் சங்கத்துடன்  பேசி வருகிறோம். தமிழகத்துக்கு ரஜினிகாந்த் வந்தார் அவரை தமிழக மக்கள் வாழ வைத்தார்கள் அவரும் தமிழக மக்கள் மீது பாசமாக இருக்கிறார்.  அதேபோல் தமிழில் நடிக்க வந்திருக்கும் இப்பட ஹீரோவையும் தமிழக மக்கள் வாழ வைப்பார்கள்.” என்றார்.

 

வசனகர்த்தா பிரபாகரன் பேசுகையில், “இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு ஒரு பகுதிதான். என் நண்பர் எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தின் ஒருபகுதி வசனம் எழுதி உள்ளார். இந்த படம் லாக் டவுன் மையமாக வைத்த படம். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு காலகட்டம் பதிவு செய்யப்படும். இப்படம் லால் டவுன் கால கட்டத்தை பதிவு செய்யும் படமாக   இருக்கும். இப்படத்தை மாஸ்டர் ஜாலி பாஸ்டியன்.இயக்க அவரது மகன் ஜாலி விஹான் (அமித் )நடித்துள்ளார். இவர் தென்னகத்தில் உள்ள எல்லா ஹீரோக்களுக்கும் நிழல் ஹீரோவாக அதாவது டூப் ஹீரோவாக இருந்தவர். அவரை. வைத்து ஜாக்கி ஜான் பணியில் ஒரு படத்தை ஜாலி மாஸ்டர் இயக்குவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அருமையான கதையை எழுதி இயக்குகிறார். டாக்சி டிரைவராக விஹான் நடிக்கிறார். ஒரு அழகான காதல், கணவன் மனைவி குடும்ப சூழலில் நிறைவான ஒரு படமாக லாக் டவுன்.டைரி.உருவாகி இருக்கிறது. இப்படத்துக்கு உங்கள் ஆதரவு தேவை நன்றி.” என்றார்.

 

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “ஜாலி மாஸ்டர் என்னை அழைத்து நீங்க எப்படி  வேண்டு மென்றாலும்  பேசி நடிங்க என்று சுதந்திரம் தந்தார்.  ஹீரோவின் வளர்ப்பு தந்தையாக மெக்கானிக் ஷெட் ஓனராக  என்னை நடிக்க வைத்திருக்கிறார்.  நல்ல கதை அம்சம் கொண்ட படம். ஆக்ஷன் சென்டிமென்ட், காமெடி எல்லாம் இதில் உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறேன்.” என்றார்.

 

Lockdown Diary

 

கதாநாயகன் ஜாலி விஹான் (அமித்) பேசுகையில், “எனது தந்தை இயக்குனர் ஜாலி மாஸ்டர், தயாரிப்பாளர் எஸ்.முரளி இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தார்கள் அதற்கு நன்றி. இப்படத்தில் நான் நாயகனாக அறிமுகமாகிறேன். என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகை பிரவீனா பேசுகையில், “நான் நிறைய தமிழ்,.மலையாள படங்களில் நடித்துதிருக்கிறேன் நல்ல பாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடிப்பேன். லாக் டவுன் டைரி படத்தில் சிறிய பாத்திரம் தான். 2 நாள் கால்ஷீட் தான் கேட்டார்கள்.  இவ்வளவு சிறிய பாத்திரத்தில் ஏன் நடிக்க வேண்டும் மறுத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன் இயக்குனர் என்னிடம் படத்தின் கதையை சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்தது. சிறிய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை இதில் நடித்தே ஆக வேண்டும் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். ஹீரோ பிரமாதமாக நடித்திருக்கிறார். தியேட்டரில் சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

பாடலாசிரியர் முருகானந்தம் பேசுகையில், “இந்த படத்தில் 3 பாடல்கள் எழுதி உள்ளேன். எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. லாக் டவுன் டைரி படத்துக்கு  ஆதரவு தாருங்கள். நன்றி.” என்றார்.

 

நடிகர் முத்துக்களை பேசுகையில், “லாக் டவுன் டைரி படம்  நன்றாக வந்திருக்கிறது. நான் சினிமாவில் தான் இருக்கிறேன் ஆனால் எனக்கே ஒன்றிரண்டு சீன்களில் கண் கலங்கும் விதமாக இதில் காட்சிகள் இருக்கிறது. எனக்கும் நல்ல வேடம், பட வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் பி கே எச் தாஸ் பேசுகையில், “லாக் டவுனில் எவ்வளவு  கஷ்டப்பட் டோமோ அப்படித்தான் இந்த படத்தில் நான் கஷ்டப்பட்டேன். அவ்வளவு கடினமான காட்சிகளை இயக்குனர் அமைப்பார். இந்த படம் ஊட்டி, பெங்களூர் என இரண்டு இடங்களில் அழகாக படமாக்கப் பட்டது. படம் வெற்றிபெற ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குனர், வசனகர்த்தா லியாகத் அலிகான் பேசுகையில், “லாக் டவுன் டைரி படத்தை பொறுத்தவரை பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் டிரெய்லரில் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. பைட். மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் இயக்கியிருக்கும் இப்படத்தில் இப்படி ஒரு சமூக அக்கறை இருக்குமா என்று டிரெய்லரை பார்க்கும்போதே நினைத்தேன் அப்போதுதான் இதில் வசனகர்த்தா பிரபாகர் இணைந்திருப்பதை  கண்டேன்.

 

எந்த படத்திலும் ஸ்கிரிப்ட் தான் ஹீரோ. இதை என்னிடம் மம்முட்டி சொல்வார். சமீபத்தில் வெற்றி பெற்ற  சின்ன படங்களுக்கான காரணம்  ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தது தான். மற்ற மொழிகளில் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது தமிழில் எழுத்தாளர்கள் என்ற ஜாதியையே அழித்து விட்டார்கள். எத்தனையோ இயக்குனர்கள் எழுத்தாளர்களிடம் கதைகளை வாங்குகிறார்கள். அந்த படங்கள் வெற்றி பெறுகின்றன. எழுத்தாளர்களை. உக்குவிக்கும்படி கேட்டுக்கொண்டு இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

ஸ்டண்ட் யூனியன் தலைவர் தவசி ராஜ் பேசுகையில், “உணமை சம்பவத்தை படமாக்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஏதோ ஒரு ஊரில் நடந்த சம்பவத்தைத்தான் படமாக்கி இருப்பார்கள். முதன் முறை ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த சம்பவம் லாக் டவுன் டைரி படத்தில் படமாக்கி இருக்கிறது. இந்த படத்தை நிச்சயமாக வெற்றி படமாக்க வேண்டும். இந்த படத்தை ஜாலி மாஸ்டர் இயக்கியிருக்கிறார். தன் மகனை தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று  இப்படம் இயக்கி உள்ளார். வந்தாரை  வாழ வைக்கும் தமிழகம் இவரையும் வாழ வைக்கும்.” என்றார்.

 

பெப்சி விஜயன் பேசுகையில், “இந்த படத்தின் இயக்குனர் ஜாலி மாஸ்டர் பைக் ஜம்பர், அவரது மகன் இப்படத்தின் ஹீரோ டிரக்கையே  ஜம்ப் செய்திருக்கிறார். உயிரை பணயம் வைத்து அவர் இதெல்லாம் செய்திருக்கிறார். இதில் ஹீரோவை ஒரு  தொழிலாளியாகத்தான் காட்டியிருக்கிறார்கள். இந்த பட டிரெய்லரை பார்க்கும் போதே இதயத்தை பிசைவது போன்ற ஒரு கதையை சொளல்லபோகிறார்கள் என்று தெரிந்தது.” என்றார்.


Related News

9128

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery