சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி பிரமோத் இணைந்து மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கும் இபப்டம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான இன்று (ஜூலை 23) ‘கங்குவா’ திரைப்படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 2.21 நிமிடங்கள் ஓடும் இந்த புரோமோ வீடியோ பிரமிக்க வைக்கும் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளுடன், வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா மிரட்டும் காட்சியோடு இருக்கிறது.
புரோமோ வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில், சூர்யாவின் பிறந்தநாளோடு, ‘கங்குவா’ புரோமோ வீடியோவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு மற்றும் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு படத்திற்கு பெரும் பலம்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்தினை மேலும் அதிகப்படுத்தும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
சுமார் 10 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...