இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக ‘ஜவான்’ உருவாகி வருகிறது. இதில் தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு தற்போது விஜய் சேதுபதியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
‘மரணத்தின் வியாபாரி’ என்ற வாக்கியத்தோடு வெளியாகியிருக்கும் விஜய் சேதுபதியின் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அவரது கதாபாத்திர சித்தரிப்பை காட்டுகிறது.
'ஜவான்' படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சக்தி வாய்ந்த நடிப்பு மற்றும் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றவர் என்பதால், அவரின் திரை தோன்றல் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. 'மரணத்தின் வியாபாரி'யாக அவர் மாறி இருப்பது முதுகுத்தண்டையும் சில்லிட வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது. ஆக்சன் மற்றும் திரில்லர் ஆர்வலர்களுக்கு 'ஜவான்' அவசியம் பார்க்க வேண்டிய படைப்பாக இருக்கிறது.
ரெட்டி சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கெளரி கான் தயாரிக்க, கெளரவ் ஷர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கும் ‘ஜவான்’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...