வருண் தேஜ் நடிக்கும் 14 வது படத்தை ‘பலாசா’ திரைப்பட புகழ் கருணா குமார் இயக்க உள்ளார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மோகன் செருக்குறி மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா இணைந்து மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கும் இப்படம் இன்று ஐதரபாத்தில் பிரமாண்டமான முறையில் தொடங்கியது.
இப்படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கும் நிலையில், பிரபல நடிகை நோரா ஃபதேஹியும் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார். பல அட்டகாசமான டான்ஸ் நம்பர்களால் புகழ்பெற்ற நோரா ஃபதேஹி, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு ஒரு அட்டகாசமான டான்ஸ் நம்பரில் கலக்கவுள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் 1960-களின் காலகட்ட பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. 60-களின் சூழலையும் அந்த உணர்வையும் கொண்டு வர படக்குழு கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...