Latest News :

ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் ‘யோக்கியன்’
Thursday July-27 2023

ஜெய் ஆகாஷ் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘யோக்கியன்’. இதில் நாயகிகளாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை சார் பிரபா மீனா இயக்கியிருக்கிறார். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார்.

 

’யோக்கியன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், நாளை (ஜூலை 28) திரையரங்குகளில் வெளியாவதோடு, ஏ கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App) என்ற ஒடிடி தளத்திலும் வெளியாகிறது.

 

முதல் முறையாக ஒரே சமயத்தில் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் ‘யோக்கியன்’ படம் வெளியாவது குறித்து கூறிய நடிகர் ஜெய் ஆகாஷ், “ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும்.கடினமாக  உழைத்திருக்கிறார்கள்.

 

எந்தவொரு படமும் மக்களிடம்.கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. ஆனால் இப்போது  தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய  பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவ தில்லை.அவர்களை குற்றம்  சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான்  ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை. ஏ கியூப ஆப்பை ஆண்ட்ராய்ட் போனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும்,  ஆப்பிள் போனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக  டவுன் லோடு செய்துகொள்ளலாம். அதில் படத்தின் டிரெய்லர் வரும் அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும். வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.

 

A கியூப் ஆப்பிள் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள்.  இதனால் படத்தின். மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பிள் வெளியிட எனது 3 படங்கள் ரெடியாக உள்ளது.படம் எடுத்துவிட்டு  தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில்  வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப் படும் அத்துடன் 80 சதவீதம் வருமான அளிக்கப்படும் 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும்.

 

சினிமாவில் நான் நடித்து பெற்ற பெயரைவிட  ஜீ தமிழ் டிவியில் நீ தானே என் பொன் வசந்தம் என்ற டி வி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிட்டேன். அதனால் அவ்வளவு ரசிகர்களும் என் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

 

ஜூலை 28ம் தேதி தியேட்டரிலும் யோக்கியன் ரிலீஸ் ஆகிறது. குறைந்தளவு தியேட்டர்ல்தான் படம் வெளியாகிறது தியேட்டரில் படத்தை பார்க்க  முடியா விட்டால் ஏ கியூப் மூவிஸ் ஆப்பிள் யோக்கியன் படத்தை பார்த்து ரசியுங்கள்  

 

கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை இப்படம் மையமாக கொண்டு இக்கதை உருவாகி யுள்ளது.  அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக் கிறது. நல்லவன் கெட்டவன் ரோல்களில்  ஹீரோக்கள் நடிக்கின்றனர்.  அப்படியொரு முயற்சியாகவே நான் இதில் நடித்திருக்கிறேன். ஹீரோவாக மட்டுமல்லாமல்  வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இதில் காணலாம். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் சாய் பிரபா மீனா பேசுகையில், “யோக்கியன் கதையை ஜெய் ஆகாஷ்  எழுதி உள்ளார். திரைக்கதை அமைத்து நான்  இயக்கி உள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் ஏ கியூப் ஆப்பில் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

Related News

9138

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery