தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
மேலும், அதே நாளில் தனுஷின் 51 வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்தது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார்.
தனுஷின் 51 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை திரைப்பட தயாரிப்பில் ஜாம்பவானாக திகழ்பவரும், திரையரங்க அதிபரான நாராயண் தாஸ் கே.நாரங் ஆசிரியுடன், சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க, சோனாலி நாரங் வழங்க இருக்கிறார்.
மிகப்பெரிய பொருட்செலவில் பல மொழிகளில் வெளியாகும் பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ள டி51 படத்தின் கான்செப்ட் போஸ்டரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.
இதுவரை முன்னெப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப்படத்தில் பங்குபெற உள்ள இன்னும் சில மிகப்பெரிய பிரபலங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...