இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டிருக்கும் தனுஷ், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை பல ஆக்கப்பூர்வமான பணிகள் மூலம் கொண்டாடிய அவரது ரசிகரள் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அருணாச்சலம் சாலையில் தனுஷ் ரசிகர் மன்றம் அமைத்த மோர் பந்தலில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக இலவச மதிய உணவு மக்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, பூரி ஆகியவை சுமார் 600 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் மதிய உணவாக 1500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை அனைத்திந்திய தலைமை மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா உடன் இருந்து துவங்கி வைத்தார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...