‘டாடா’ படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்திருக்கும் கவினுக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறதாம். இருந்தாலும் கதை மற்றும் தயாரிப்பு தரப்பு, இயக்குநர் ஆகியவற்றில் மிக கவனம் செலுத்தி வரும் கவின், தற்போது இரண்டு படங்களில் நட்டும் நடித்து வருகிறாராம். அதில் ஒரு படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய நளன் இயக்குகிறார். மற்றொரு படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார்.
இந்த நிலையில், கவினுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிய கவின் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஹீரோவாக வெற்றி பெற்ற பிறகெ திருமணம் என்பதிலும் உறுதியாக இருந்தாராம்.
அதன்படி, அவர் நடித்த ஆரம்ப படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவிலலி என்றாலும், ‘டாடா’ படத்திற்கு கிடைத்த வெற்றியால் அவர் தற்போது கோலிவுட்டில் பிஸியான ஹீரோவாக உருவெடுத்து விட்டார். அதனால், தனது குடும்பத்தார் ஆசைப்படி திருமணத்திற்கும் ஒகே சொல்லிவிட்டாராம்.
அவரது பெற்றோர் பார்த்த பெண்ணை தான் கவின் மணக்க இருக்கிறார். அவரது திருமணம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், இது காதல் திருமணம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
தனது திருமணம் பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிக்க இருக்கும் கவின், பெண் யார்? என்பதையும் அப்போது சொல்ல இருக்கிறாராம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...