Latest News :

அறிமுக இயக்குநரின் அரசியல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்!
Monday July-31 2023

நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இயக்குநர் செல்வராகவன் பல படங்களில் கதையின் நாயகனாக மட்டும் இன்றி வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் நிலையில், அறிமுக இயக்குநர் ரெங்கநாதன் என்பவர் இயக்கும் அரசியல் படத்தில் நயகனாக நடிக்கிறார்.  

 

யோகி பாபு யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக நடிக்க, மற்றொரு நாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.

 

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்காதேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராமபாண்டியன் படத்தொகுப்பு செய்கிறார். டி.பாலசுப்பிரமணியன் கலை இயக்குநராக பணியாற்ற, சதீஷ் சுந்தர்ராஜன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் பணியாற்றுகிறார்.

 

Selvaraghavan and Sunil

 

இப்படம் பற்றி இயக்குநர் ரெங்கநாதன் கூறுகையில், “தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்.” என்றார். 

Related News

9144

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery