ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் திரையரங்குகளில் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சந்திரமுகி 2’ என்ற தலைப்பில் பி.வாசு இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் ‘சந்திரமுகி 2’-வில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். நாயகியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சந்திரமுகி முதல் பாகத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வேட்டையன் கதாபாத்திரம், தற்போது உருவாகும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளது. வேட்டையனாக ரஜினி மிரட்டியதை தொடர்ந்து ராகவா லாரன்ஸு அந்த வேடத்தில் எப்படி இருப்பார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்த நிலையில், படக்குழு இன்று வேட்டையன் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது.
வேட்டையானக ராகவா லாரன்ஸ் கம்பீரமாக காட்சியளிக்கும் போஸ்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பி.வாசுவின் 65 வது திரைப்படமாக உருவாகும் ‘சந்திரமுகி 2’-க்கு ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.கே.எம். குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...