இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது ‘ஜவான்’. ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
’ஜவான்’ திரைப்படம் தொடர்பாக படக்குழு வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளும் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் புரோமோ வீடியோ ஒன்று பாலிவுட் சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு பிரமாண்டமான ஆக்ஷன் சாகச காட்சிகள் நிறைந்தவையாக இருந்தது. அந்த வீடியோவால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், சமீபத்தில் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.
ஹிந்தியில் ”ஜிந்தா பந்தா...”, தமிழில் “வந்த எடம்...” மற்றும் தெலுங்கில் ”தும்மே துலிபேலா...” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இப்பாடல் தற்போது மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியதோடு, யுடியுபில் 46 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து பெறப்பட்ட பார்வைகளை இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஜவான் படத்தின் முதல் பாடல் அனைத்து மொழி பார்வையாளர்களால், அனைத்து தளங்களிலும், மொழிகளிலும் பரவலாகப் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனையின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், முதன் முறையாக, ஒரு திரைப்படத்தின் மூன்று மொழி வீடியோ 24 மணிநேரத்திற்குள் யுடியுபின் உலகளாவிய தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இது சமீபத்திய காலங்களில் எந்தவொரு பாடலும் செய்யாத சாதனையாகும். இந்த அசாதாரண சாதனை, ஜவானின் இசையின் இணையற்ற புகழ் மற்றும் உலகளாவிய அளவிலான எதிர்பார்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜவான் திரைப்படம், மொழியியல் தடைகளைத் தாண்டி உலகளவில் பார்வையாளர்களைக் ஈர்த்து வருகிறது.
'ஜிந்தா பந்தா,' 'வந்த எடம்,' மற்றும் 'தும்மே துளிபேலா' ஆகிய இசை வீடியோக்கள் ஜவான் படத்தின் ஒரு சிறு அறிமுகமாக அமைந்துள்ளது. இப்பாடலில் ஷாருக்கான் ஆயிரக்கணக்கான பெண் நடன கலைஞர்கள் மற்றும் படத்தில் நடித்துள்ள அவரது பெண் சக நடிகர்களுடன் அழகாக நடனமாடுகிறார்.
துடிப்பான மற்றும் கவர்ச்சியான டியூனுடன், இந்தப் பாடல் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத்தின் முத்திரையை கொண்டுள்ளது. இந்த பாடல் வெளியீட்டின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூன்று மொழிகளிலும் பாடலின் வரிகளுக்கு உதடசைத்து, ஷாருக்கான் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, கௌரி கான் தயாரிக்க, கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கும் ‘ஜவான்’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...