இயல்பான மற்றும் எளிமையான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் கயல் ஆனந்தி, சரியான கதை தேர்வு மூலம் சரியான பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று வரும் நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் கூறுகையில், “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.
கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். . ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள் இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்.” என்றார்.
ரஞ்சனி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜோஹன் ஷெவனேஷ் இசையமைக்கிறார். இளையராஜா.வி ஒளிப்பதிவு செய்கிறார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்ய, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். டி.என்.கபிலன் கலை இயக்குநராக பணியாற்ற, பீனிக்ஸ் பிரபு மற்றும் ராம்போ விமல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். லீலாவதி நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஏ.சுபிகா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளர்களாக் ’டி ஒன்’ ரேகா மற்றும் சுரேஷ் சந்திரா பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கும் ராஜசேகர் இயக்குநர் சுசி கணேசனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...