சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கான திரைப்பட விழா என்பது குறைவாகவே இருக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளை தாண்டி தமிழர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டில் ஒவ்வொரு வருடம் ‘டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ என்ற தலைப்பில் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான ‘டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விழா குழுவினர் வெளியியிட்டுள்ளனர்.
கனடா நாட்டு அரசு அந்நாட்டில் வாழும் தமிழர்களின் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்காக அனைத்து ஒத்துழைப்பை வழங்குவதோடு, அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்து வருகிறார்கள். எனவே,கனடாவில் நடைபெறும் இத்திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமைகிறது.
மேலும், உலகில் நடைபெறும் மிகப் பெரிய திரைப்பட விழா என அறியப்பட்ட ‘டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா’ ‘டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ நடைபெறும் வாரத்திலேயே நடைபெறவுள்ளதால், டொராண்டோ வரும் திரைப்பட ரசிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இரண்டு விழாக்களிலும் பங்குபெர வாய்ப்பு கிடைக்கிறது.
உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாக, திரைக்களமாக, பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டியிட்டு தகுதியுடையவர்கள் விருது, பரிசுகளுடன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிற்சி, பட தயாரிப்பு உதவி களமாக அமைந்திருக்கின்ற டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் திரையிடல் மற்றும் திரைப்பட போட்டிகளுக்கான விண்ணப்பத்தை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் உங்களது படைப்புகள் திரையிட மற்றும் போட்டி பிரிவுகளில் பங்கேற்க https://filmfreeway.com/ttiff/ என்ற இணையதளம் மூலம் அனுப்பி வைக்கலாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...