தமிழ் சினிமாவின் மற்றொமொரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் மணிகண்டன். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவர்ந்தவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘குட் நைட்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் மட்டும் இன்றி கோலிவுட்டிலும் ஹீரோவாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார்.
இந்த நிலையில், ‘குட் நைட்’ திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.பி.எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்திலும் புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார்கள்.
பிரபுராம் வியாஸ் என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கும் இந்த படத்திலும் ‘குட் நைட்’ புகழ் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். ‘மாடர்ன் லவ்’ புகழ் ஸ்ரீகெளரி பிரியா ஹீரோயினாக நடிக்கிறார். கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்ய, ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களை மோகன் ராஜன் எழுதுகிறார்.
டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.பி.எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பு துவக்கி வைத்தார்.
‘குட் நைட்’ படத்தின் மூலம் ரசிகர்களால் குட்டி விஜய் சேதுபதி என்று அழைக்கப்பட்ட மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் படத்தை விஜய் சேதுபதி தொடங்கி வைத்திருப்பதும், புதுமுக கூட்டணியாக இருந்தாலும் கண்டெண்ட் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய ‘குட் நைட்’ பட தயாரிப்பாளர்களின் படம் என்பதாலும் இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகிய குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவா அருகே உள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வர, அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...