2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமாக உருவாகி வருகிறது ‘விருஷபா’. ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதியுடன் மெகாஸ்டார் மோகன்லால் & ரோஷன் மேகா, ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா எஸ்.கான் ஆகியோர் நடிக்கும் இப்படம் பிரமாண்டமான ஆக்சன் மற்றும் VFX காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான படமாக உருவாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் மற்றொரு சிறப்பாக ஹாலிவுட் பிரபலம் நிக் துர்லோவ் நிர்வாக தயாரிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மூன்லைட்’, ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங்’, ‘மிஸ்சவுரி’ போன்ற ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்களில் பணிபுரிந்ததோடு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் நிக் துர்லோவ்.
படத்தின் தரம் மற்றும் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக, தயாரிப்பாளர்கள் 57 வினாடிகள் கொண்ட ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர். இதில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில், பிரமாண்ட செட் அமைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. படத்தின் முழுப் பணிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது . ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் வழக்கமாக பின்பற்றும், இந்த பாணியை இந்தியாவில் பின்பற்றும் முதல் படம் ’விருஷபா’ ஆகும்.
இது குறித்து தயாரிப்பாளர் விஷால் குர்னானி கூறுகையில், “நிக் துர்லோவ் எங்களுடன் இணைந்திருப்பதால், எங்கள் படம் எவ்வளவு பெரிய பட்ஜெட்டில், எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதை ஒருவர் உணர முடியும். ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தயாரிக்கப்படும் முதல் இந்தியப் படங்களில் விருஷபா ஒன்றாக இருக்கும், ஹாலிவுட் ஆளுமை ஒருவர் எங்கள் விருஷபா குழுவில் இணைந்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்.” என்றார்.
படம் குறித்து நிக் துர்லோவ் கூறுகையில்”’விருஷபா’ எனது முதல் இந்தியப் படம், இப்படத்தில் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு நிர்வாக தயாரிப்பாளராக, திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் நான் கவனம் செலுத்துவேன். எனது நாட்டுக்கு வெளியே, ஒரு பன்மொழித் திரைப்படத்தில், பணிபுரிவது இதுவே முதல் முறை, இப்படத்தில் பணிபுரிவது மிகப்பெரும் மகிழ்ச்சி. ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது, எனக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கிறது அந்த வகையில், ’விருஷபா’ படத்தின் அனுபவமும் அசாதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்) (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.. தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...