தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘டெவில்’. இதில் கல்யாண் ராமுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தேவன்ஷ் நாமா வழங்கும் இப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் விசா கதை, திரைக்கதை, வசனம் எழுத, நவீன் மேடாராம் இயக்குகிறார். எஸ்.செந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் இசையமைத்திருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாகிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் அண்மையில் இந்தி பதிப்பின் காணொளியை வெளியிட்டனர். இது மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
'டெவில்' படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இருந்தது. படத்தினைப் பற்றிய புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை தயாரிப்பாளர்கள் 'நவம்பர் 24 2023 டிகோடிங்' என எழுதப்பட்ட ஒரு வசீகரமான மற்றும் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகனான கல்யாண் ராம் - ஒரு மர்மத்தை தீர்க்கும் புதிரான பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்டாக நடிக்கிறார். கடந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் 'பிம்பிசாரா' எனும் படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற கல்யாண் ராம், சுவராசியமான படத்துடன் மீண்டும் வருகை தந்திருக்கிறார்.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...