விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ நாளுக்கு நாள் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வெளியான புதிய டீசர் மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
மூன்று வேடங்களில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள இப்படத்தில், முறுக்கு மீசையுடன் வரும் விஜய் வேடம் தான் மிகப்பெரிய மாஸாக இருக்கும், என்று ஏற்கனவே இயக்குநர் அட்லி கூறியிருந்தார். நேற்று வெளியான டீசர் அதை நிரூபிக்கும் வகையில் படு மாஸாக உள்ளது.
டீசரில் தோன்றும் முறுக்கு மீசை விஜய் பேசும், “ஒரு குழந்தை உருவாக பத்து மாதம் வேணும், ஒரு பட்டதாரி உருவாகு மூன்று வருடங்கள் போதும், ஆனால் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படும்” என்ற வசனம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...