அமேசான் ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான தமிழ் இணையத் தொடர் ‘ஸ்வீட் காரம் காபி’. இதில் நிவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் சாந்தி பாலச்சந்திரன். இவருடைய இயல்பான நடிப்பு பார்வையாளர்களை மட்டும் இன்றி விமர்சர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனால், சாந்தி பாலச்சந்திரன் பலரது பாராட்டை பெற்றார்.
மேலும், இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் திரைப்படமான ’ஜல்லிக்கட்’டில் சோஃபியாக அவரது நடிப்பு மறக்க முடியாததாக இருந்தது. வித்தியாசமான மற்றும் சவாலான பாத்திரங்களை எளிதில் இவரால் கையாள முடியும் என்ற நம்பிக்கையை முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களிடம் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
சாந்தி பாலச்சந்திரனின் திறமை நடிப்புத் துறையில் மட்டும் நின்றுவிடவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட இவரது எக்ஸ்பிரிமெண்ட்டல் இசை வீடியோ ‘Oblivion’ மூலம் எழுத்தாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் இணை இயக்குநராக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
‘தி லவ்வர்’ மற்றும் ’எ வெரி நார்மல் ஃபேமிலி’ போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மேடை நாடகங்களிலும் நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ள சாந்தி பாலச்சந்திரன், நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருவதோடு, பல படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தயாரிப்புத் தரப்பில் இருந்து வெளியாகும்.
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...