Latest News :

ஹீரோவை தொடர்ந்து இயக்குநராகவும் அறிமுகமாகும் நடிகர் ‘அருவி’ மதன்!
Monday August-14 2023

‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி திரையுலகினர் கவனத்தை ஈர்த்த மதன், 'கர்ணன்', 'பேட்டை', 'அயலி', 'துணிவு', 'அயோத்தி', 'பம்பர்', 'மாமன்னன்', 'மாவீரன்' என தொடர்ந்து பல படங்களில் நடித்து, தனது திறமையான நடிப்பு மூலம் பாராட்டு பெற்று வருகிறார்.

 

இதற்கிடையே, இயக்குநர் வெற்றி மகாலிங்கம் இயக்கும் இன்னும் தலைப்பு வைக்காத திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ‘அருவி’ மதன், தற்போது இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார். ஆம், ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் ‘அருவி’ மதன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறர். 

 

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வரும்  பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதை நாயகனாக நடித்திருக்கிறார். 

 

'டூ லெட்', 'மண்டேலா' உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடிக்க, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா  மற்றும் பலர் நடிக்க, 'அருவி' மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

 

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'நூடுல்ஸ்' படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது  ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார்.  வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

Noodles

 

இப்படம் குறித்து இயக்குநரும் நடிகருமான ‘அருவி’ மதன் கூறுகையில், “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு 'நூடுல்ஸ்'.  இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. 

 

அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில  இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன, இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி இந்த 'நூடுல்ஸ்' படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது எனவும், குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அவர்கள் குழந்தையும் எதிர்பாராத ஓர் சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு படும் பாடும், அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனையை சரி செய்ய அவர்கள் வீட்டிற்குள் வரும் ஒருவர் செய்யும் உச்சபட்சக் காமெடியும், இதற்கிடையில் அந்தக் குடியிருப்பில் வசிப்போரின் பரிதவிப்பும் என படம் பார்க்கும் அனைவரையும் ஒன்றே முக்கால் மணி நேரமும் மிகுந்த எதிர்பார்ப்பினூடே சிரிப்பும், சுவாரசியமும், உற்சாகமுமாக உட்காரச் செய்யும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.” என்றார்.

 

சமீபமாக வெளியான 'போர்த்தொழில்', 'குட்நைட்' படங்கள் வரை  நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்து கொண்டாடிய ரசிகர்கள்  'நூடுல்ஸ்' திரைப்படத்திற்கும் அதே வரவேற்பைக் கொடுப்பார்கள் என்று 'நூடுல்ஸ்' சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்தப்படத்தை  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட முன்வந்துள்ளது இன்னும் நம்பிக்கை அளிக்கிறது. 

Related News

9176

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery