Latest News :

’போர் தொழில்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு இளம் நடிகருடன் சரத்குமார் இணைந்திருக்கும் ‘பரம்பொருள்’!
Wednesday August-16 2023

நடிகர் சரத்குமார் - அசோக் செல்வன் இணைந்து நடித்த ‘போர் தொழில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, மற்றொரு இளம் நடிகருடன் சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக கலக்கிய அமிதாஷ் ஹீரோவாக களம் இறங்கும் படம் ‘பரம்பொருள்’. இதில் அமிதாஷுடன் சரத்குமாருடம் இணைந்து நடித்திருக்கிறார். இதில் நாயகியாக காஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் சி.அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாகூரான் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சதீஷ் நடன காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

 

சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு படத்தின் டிரைலரை வெளியிட்டுனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மணிரத்னம், “இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக‌ மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'பரம்பொருள்' திரைப்படம் வெற்றிபெற அனைவரும் வாழ்த்துவோம்.” என்றார்.

 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், “எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது, அனைவரும் ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. 'பரம்பொருள்' குழு வெற்றிபெற வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “இது குழு முயற்சி. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம் 'பரம்பொருள்'. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் அமிதாஷ் பேசுகையில், “பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். 'பரம்பொருள்' படத்திற்கு மேலான ஆதரவை வழங்குமாறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். சரத்குமார் சார் இந்த கதைக்கு தனது முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா சார் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் கிரிஷ் உள்ளிட்ட‌ அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் மிகவும் நன்றி. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். குறிப்பாக எனது பெற்றோருக்கு நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ் பேசுகையில், “’பரம்பொருள்’ படத்தில் பணியாற்றிய‌ அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் நன்றி. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.” என்றார்.

 

சுஹாசினி மணிரத்னம் பேசுகையில், “இங்கு வந்ததில் மகிழ்ச்சி. 'பரம்பொருள்' குழுவிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பேசுகையில், “தயாரிப்பாளர்கள், இயக்குநர், அமிதாஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பு மற்றும் கதையைக் கேட்டதிலிருந்தே இதில் பணியாற்ற மிகவும் ஆவலாக இருந்தேன். சரத்குமார் சார் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும் நன்றி.” என்றார்.

 

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “இத்திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்து இதை வெளியிட விரும்பினேன். சரத்குமார் சார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'போர்த்தொழில்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 'பரம்பொருள்' படத்தை பார்த்து அதில் என்னை இணைத்துக் கொண்டேன். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். அமிதாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். 'பரம்பொருள்' நிச்சயம் வெற்றியடையும்.” என்றார்.

 

Param Porul

 

நடிகர் வின்சன்ட் அசோகன் பேசுகையில், “இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் சிறப்பு அதன் திரைக்கதை. சரத்குமார் சார் மற்றும் அமிதாஷ் நன்றாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டுகிறேன்.” என்றார்.

 

நடிகரும் இயக்குநருமான‌ பாலாஜி சக்திவேல் பேசுகையில், “'பரம்பொருள்' படத்தின் கதையை கேட்டு மிகவும் ரசித்தேன். அமிதாஷ் மற்றும் சரத் சார் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரின் சிறப்பான ஒத்துழைப்புடன் படம் உருவாகியுள்ளது.” என்றார்.

 

நடன இயக்குந‌ர் சதீஷ் பேசுகையில், “இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜா சாருக்கு மிக முக்கியமான படமாக அமையும். சரத்குமார் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமிதாஷ் மற்றும் கிரிஷ் சாருக்கு நன்றி. படம் வெற்றி பெற, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

இயக்குந‌ர் சி. அரவிந்த் ராஜ் பேசுகையில், “இக்கதையை சொன்னவுடன் சரத்குமார் சாருக்கும் அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாள‌ர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் 'பரம்பொருள்' திரைப்படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவை தர வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.” என்றார்.


Related News

9178

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery