ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் ‘2.0’ சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.
2018 ஆம் ஆண்டு வெளியாக உள்ள இப்பட்த்தின் புரோமோஷன்கள் இப்போதே தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதுப்படங்களை சட்டவிரோதமாக இணையத்திள் வெளியிட்டு, தமிழ் திரையுலகினருக்கு சவால் விட்டு வரும் தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விடும் வகையில், ‘2.0’ படத்தினை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதலில் 2.0 படத்தை 2டி மற்றும் 3டி ஆகிய வெர்ஷன்களில் திரையரங்குகளில் தன்மையைப் பொறுத்து வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது 3டி வெர்ஷன் மட்டுமே முதலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதுதாம். இதன் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்த பின்பு படம் 2டி வெர்ஷனில் வெளியாகுமாம்.
இந்த 3டி வெர்ஷன் படத்தை திருட்டுத் தனமாக கேமராவில் பதிவு செய்து வெளியிடுவதை சரியான தரத்தை தராது. அப்படியே வெளியானாலும், அதனை ஆன்லைனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ படம் பார்க்கும் அனுபவம் என்பது 0 சதவீதமாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு, படங்களை இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு, 2.0 படத்தின் மூலம் லைகா சவால் விட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...