ரசிகர்களால் மாஸ் மஹாராஜ என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வர ராவ்’-வின் முதல் பார்வை போஸ்டர், தலைப்பு உள்ளிட்ட அனைத்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் ரசிகர்களை எதிர்ப்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மோசமான கொள்ளைச் சம்பவங்களைச் செய்த ஸ்டூவர்ட்புரம் கொள்ளையன் டைகர் நாகேஸ்வர ராவ் சென்னை மத்திய சிறையில் இருந்து தலைமறைவானது தொடர்பான செய்தி அறிக்கையுடன் இந்த டீசர் வீடியோ தொடங்குகிறது. இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என்பதால் போலீசார் அதிர்ச்சியடைகின்றனர். புலி மண்டலத்தில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி முரளி சர்மா, டைகர் நாகேஸ்வர ராவின் அரிய திறமைகளை பற்றி டீசரில் விவரிக்கிறார்.
“நாகேஸ்வரராவ் அரசியலுக்கு வந்திருந்தால், அவர் தனது புத்திசாலித்தனத்தால் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார். அவர் விளையாட்டில் நுழைந்திருந்தால், தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றிருப்பார். அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தால், தன் வீரத்தால் போரில் வெற்றி பெற்றிருப்பார். துரதிர்ஷ்டவசமாக, அவர் குற்றவாளியாகி விட்டார்” என்று டிஎன்ஆரின் திறமைகளை விவரிக்கிறார் முரளி சர்மா.
டைகர் நாகேஸ்வர ராவ் சிறு வயதிலேயே குற்றங்களைச் செய்யத் தொடங்கியதால், சிறுவயதில் இருந்தே கடுமையான இயல்பு கொண்டவராக இருக்கிறார். மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அவர் ஏற்படுத்திய அச்சத்தால், அவரைப் பிடிக்க காவல்துறையும் இராணுவப் படையும் களமிறங்குகின்றன.
இந்த டீசரில் கடைசி வரை அவரது முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், அவரது இருப்பு டீசர் முழுவதும் தெரிகிறது. பின்னர், அவரது நுழைவு கதையை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. டீசரில் வரும் ரயில் எபிசோட் அவரது கதாபாத்திரத்தின் தைரியத்தைக் காட்டுகிறது.
ரவி தேஜாவை இந்தப்படத்தின் டீசரில் பார்த்த பிறகு, இந்த தலைப்பு வேடத்தில் வேறு எந்த நட்சத்திரத்தையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கதாப்பாத்திரமாக அவரது உருமாற்றத்தில் இருந்து கதாபாத்திரத்தை சித்தரித்தது வரை, ரவி தேஜா டீசரில் அசத்தியிருக்கிறார். அவர் தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். இயக்குநர் வம்சியின் சிறப்பான எழுத்து மற்றும் சிறந்த இயக்கம் படத்தை மெருகூட்டுகிறது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்ய, அவினாஷ் கொல்லா புரொடக்ஷன் டிசைனராக பணியாற்றுகிறார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ படங்களை தொடர்ந்து பான் இந்தியா வெற்றி படங்களை கொடுத்து வரும் அபிஷேக் அகர்வால் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
தசரா பண்டிகை வெளியீடாக வரும் அக்டோபர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படத்தின் டீசர் புலியின் படையெடுப்பை காட்டும் விதமாக மிரட்டலாக இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...