Latest News :

’குஷி’ உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் - நடிகர் விஜய் தேவரகொண்டா நம்பிக்கை
Monday August-21 2023

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் யெமலஞ்சலி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழி பதிப்பை சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் வி.பிரசாத் வெளியிட, மலையாள பதிப்பை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர்.மேத்தா வெளியிடுகிறார். 

 

தற்போது இப்படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தேவரகொண்டா இன்று காலை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நிலையில், மாலை சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதில், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களுமான என். வி. பிரசாத், முகேஷ் ஆர். மேத்தா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி. சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Kushi Press Meet

 

நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, “என்னுடைய தமிழ் பையன்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் வணக்கம் . இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த குஷி திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். உங்களை சிரிக்க வைக்கும். 'பெள்ளி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்'.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான என். வி. பிரசாத் பேசுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த அதிக திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'குஷி' திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும். இந்த படத்திற்கு தமிழிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.  

 

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தா பேசுகையில், ”குஷி படத்தினை கேரளாவில் வெளியிடுகிறேன். கேரளாவை பொறுத்தவரை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிறகு அதிக அளவிலான ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவிற்குத் தான் இருக்கிறார்கள். இந்த குஷி திரைப்படத்தை கேரளாவில்  வெளியிடுவதற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனம் விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி', 'டியர் காம்ரேட்' ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக 'குஷி' திரைப்படத்தை வெளியிடுகிறது.  இந்த படமும் மிகப் பெரும் வெற்றியை பெறும்” என்றார். 

 

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி பேசுகையில், ”மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'குஷி' திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை பார்த்தோம். அனைத்தும் கிளாஸாகவும், கிராண்டியராகவும் இருந்தது. இசையும் கமர்சியலாக இல்லாமல், கிளாஸ்ஸிக்காக இருக்கிறது. ஹீரோ விஜய் தேவரகொண்டா- ரியல் பான் இந்தியா ஸ்டார். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்து, அவர் எங்களுக்கும் குஷி தர வேண்டும். இந்த திரைப்படம் அனைத்து இடங்களிலும் பெரிய வெற்றியைப் பெற்று, அனைவருக்கும் குஷியை உண்டாக்கும். பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். 

 


Related News

9194

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery