’மாநகரம்’, ‘டாணாக்காரன்’, ’மான்ஸ்டர்’ என ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெறும் கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நாயகனாக நடித்த ‘எலி’ மற்றும் ‘தெனாலிராமன்’ படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு தயராகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக திருமண தம்பதிகளை வெகுவாக ஈர்த்துள்ள டீசர், வெளியான சில மணி நேரங்களில் பல லட்ச பார்வையாளர்களை கடந்துள்ளது.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் டீசர் என்றதுமே அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தான் இருக்கும். ஆனால், ‘இறுகப்பற்று’ படக்குழு வித்தியாசமான முறையில், உண்மையான தம்பதிகளின் வெளிப்படையான உரையாடல் மற்றும் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் அவர்கள் எந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்பதை அவர்களுக்கே உணர்த்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அந்த காட்சிகளை தொகுத்து டீசராக வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக திருமணமான தம்பதிகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை படக்குழு நடத்தியது. இதில் பங்கேற்ற ஜோடிகள் தங்களின் துணை குறித்து சரியாக தெரிந்து கொள்ளும் வகையில், தங்கள் திருமண வாழ்க்கை குறித்து, புரிதல் குறித்து பேசி, கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தனர். இந்த நிகழ்வு, அவர்களின் அனுமதியுடன் படம் பிடிக்கப்பட்டு, டீசராக வெளியாகியுள்ளது.
திருமண உறவில் இருப்பது தொடர்பான பொதுவான அனுபவங்களை எடுத்துரைப்பதன் மூலம் பார்வையாளர்களை ஆழமான மட்டத்தில் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான தம்பதிகள் தங்கள் தனிப்பட்ட பயணங்கள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதைக் காண்பிப்பதன் மூலம் பல்வேறு பின்னணியில் இருந்து பார்வையாளர்களுடன் இணைவதை டீசர் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிஜ தம்பதிகள், வெளிப்படையாக தங்களின் தனிப்பட்ட பயணங்கள், பிரச்சினைகள், சந்தோஷங்கள் குறித்துப் பேசுவது, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. அதிலும், திருமணமானவர்களை அதிகம் கவர்ந்திருக்கும் இந்த டீசர், அவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறது. டீசரே இப்படி மக்களை சிந்திக்க செய்கிறது என்றால், படம் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சி குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் புதுமையான யோசனைகளை நாங்கள் தொடர்ந்து திரைக்குக் கொண்டு வருகிறோம். தற்போது இறுகப்பற்று திரைப்படத்தின் உலகை, அந்த உணர்வை பார்வையாளர்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது பார்வையாளர்களை அவர்களின் சொந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் யோசித்து, உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...