தமிழ் ராப் பாடல்கள் மூலம் மக்களிடம் பிரபலமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை கொடுத்தார். ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ’கதகளி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோமாளி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இசையமைத்தவர், ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தின் மூலம் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகி கவனம் ஈர்த்தார்.
’மீசையை முறுக்கு’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘அன்பறிவு’, ‘வீரன்’ என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் ஆதி, தற்போது ‘பிடி சார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு, தனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாக கொண்டோருக்கு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்ததை அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் (24-08-2023) நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார். இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, “இசையில் தொழில்முனைவு பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் இன்று, பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தை பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளை செய்து கொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...