Latest News :

‘வெப்பன்’ படக்குழு நடத்திய விழிப்புணர்வு பிரச்சார பேரணி!
Monday August-28 2023

மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில், ஏ.குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெப்பன்’. சத்யராஜ், வசந்த் ரவி நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் தன்யா ஹோப் ஹோப் நாயகியாக நடித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜிவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கனிகா, மைம் கோபி, இயக்குநர் வேலு பிரபாகரன், கஜராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தைஉ புதிய டெக்னாலஜியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வரும் நிலையில், ’வெப்பன்’ படத்தின் சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை விளக்கம் பிரச்சார விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

 

#WearHelmetRally என்ற தலைப்பில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பிரச்சார இருசக்கர பேரணியில் நடிகர் வசந்த் ரவி, நடிகை தன்யா ஹோப், தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

 

Weapon Movie Bike Rally

 

சாலையில் வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பாக ஓட்டுவதும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துவதே இந்த ரேலியின் நோக்கம். சென்னை ஓ.எம்.ஆர்-ல் தொடங்கிய இந்தப் பயணம் தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில் முடிந்தது. இதில் பங்கு கொள்ள ராயல் என்ஃபீல்ட் ரைடர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

9207

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery