நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக களம் இறங்க போவதாகவும், தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குநர் யார்? என்பது மட்டும் தெரியாமல் இருந்தது.
இதற்கிடையே, துருவ் விக்ரமின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போகிறார் என்று தகவல் வெளியானது. பிறகு பாலா இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இது அனைத்தும் வெறும் வதந்தியே, என்பதை படக்குழு இன்று உறுதிப்படுத்தும் விதமாக, சற்று நேரத்திற்கு முன்பாக துருவ் விக்ரமின் முதல் படத்தை இயக்க போகும் இயக்குநரின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆம், துருவ் விக்ரமின் அறிமுக படத்தை விஜய் இயக்குகிறார். தற்போது ‘கரு’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள விஜய், அடுத்ததாக துருவ் விக்ரம் இயக்கும் படத்தை இயக்க போகிறார்.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...