கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் கிச்சா சுதீப், மற்ற மொழித் திரைப்படங்களில் மிரட்டலான வில்லனாக கவனம் ஈர்த்து வருவதோடு, தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கன்னட திரையுலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோஸ் தயாரிக்க, இப்படத்தின் திரைக்கதையை பிரபல கதை, திரைக்கதையாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இயக்குநர் ஆர்.சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.
ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதோடு, பான் இந்தியா திரைப்படம் என்பதை தாண்டி குளோபல் திரைப்படம் என்ற ரீதியில் மிகப்பெரிய படமாக இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஆர்சி ஸ்டுடியோஸ் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அவை அனைத்துமே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...