சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் அரசியல்வாதியாக நடிக்கும் கவுண்டமணிக்கு உதவியாளராக முத்துக்காளை நடிக்கிறார்.
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த ’என் உயிர் நீதானே’, சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ’அழகான நாட்கள்’ படத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து, ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் மூலம் மீண்டும் கவுண்டமணி படத்தில் முத்துக்காளை நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, முத்துக்காளையை தன் அருகே அழைத்த கவுண்டமணி, அனைவரிடமும் ’என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி வசனத்தை பேசி, பதில் வசனத்தை முத்துக்காளையை பேச சொல்லி, ரசிச்சு சிரித்தார். படக்குழுவினர் அனைவரும் அவரோடு சிரித்து, மகிழ்ந்தனர்.
22 வருடங்களுக்குப் பிறகும் தான் பேசிய வசனத்தை நினைவுக்கூர்ந்து தன்னை நடிகர் கவுண்டமணி பாராட்டியது குறித்து கூறிய நடிகர் முத்துக்காளை, ”கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் மூன்றாவது படம் ’ஒத்த ஓட்டு முத்தையா’. நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த ’என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது ’லக்கி’, ’ஷூ கீப்பர்’ , ’முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்’, ’பாதகன்’, ’கோட்டை முனி’, ’தொடு விரல்’, ’அடி ஆத்தி’, ’உதிர்’, ’கில்லி மாப்பிள்ளை’, ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’, ’சாஸ்தா’, ’அதையும் தாண்டி புனிதமானது’ என பல படங்களில் நடித்து வருகிறேன். கவுண்டமணி அண்ணனோடு நடித்துவரும் ’ஒத்த ஓட்டு முத்தையா’எனக்கு பெரும் பேரு வாங்கி தரும்.” என்றார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...