அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுதியிருக்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
விசாரணை ஆக்ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...