தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 58.
இயக்குநர்கள் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து, 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘புலிவால்’ என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவருக்கு தொடர்ந்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து, மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தின் மூலம் நடிகரான மாரிமுத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் உருவாக உயர்ந்தார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார். திரைப்படங்களில் நடிப்பதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க தொடங்கியவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை ‘எதிர் நீச்சல்’ தொடருக்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சுவலியால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று இரவு வரை வைக்கப்பட்டு, இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...